மக்கள் உயிரைப் பாதுகாக்க நடமாட்டங்களை குறைத்து வீடுகளில் இருப்பதுதான் சிறந்தது - நாங்களும் நிவாரண பணிகளை மேற்கொள்கின்றோம் புகைப்படங்கள் எடுப்பதில்லை - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 22, 2020

மக்கள் உயிரைப் பாதுகாக்க நடமாட்டங்களை குறைத்து வீடுகளில் இருப்பதுதான் சிறந்தது - நாங்களும் நிவாரண பணிகளை மேற்கொள்கின்றோம் புகைப்படங்கள் எடுப்பதில்லை

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்களும் பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றோம் ஆனால் எந்தவித புகைப்படங்களும் எடுப்பதில்லை எந்தவித வலைத்தளங்களிலும் பதிவேற்றம் இல்லை. அரசின் கட்டுப்பாட்டுக்கு இணங்க இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தல் தொடர்பில் தனது கட்சி ஆதரவாளர்களுடன் சந்திப்பில் ஈடுபட்ட பின்னர் அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை (22) ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் சில பிற்போக்குத்தனமான அரசியல்வாதிகள் மக்களுக்கு 20, 30 பொதிகளை வழங்கி விட்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்து அந்த மக்களையும் கேவலப்படுத்தி சமூக வலைத்தளங்களை பதிவேற்றி வருகின்றனர். இதில் அரசியல் லாபம் தேடுவதற்கு சில பிற்போக்கு தனமானவர்கள் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் அனைவருக்கும் இது பொதுவான பிரச்சனை ஆகும். ஒரு மாவட்ட பிரச்சினையாக இருந்தால் நாங்கள் வேண்டிய அளவு நிவாரணங்களை வழங்கி இருப்போம் . உதாரணமாக 2010ஆம் ஆண்டு காலகட்டத்தில் கிழக்கு மாகாண ரீதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும் நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பாரியளவு நிவாரண வசதிகளை செய்து கொடுத்திருந்தோம்.

தற்போது ஏற்பட்டு இருக்கின்ற சூழல் அனைத்து நாட்டு மக்களும் முடங்கிப்போய் இருக்கின்ற நிலை அரசாங்கம்தான் இதனைப் பொறுப்பெடுத்து செய்ய வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது இதனை மக்களும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.இது அனைவரும் சேர்ந்து செயற்பட வேண்டிய ஒரு செயற்பாடு.

பல செல்வந்தர்கள் தாமாக முன்வந்து மக்களுக்கு நிவாரணங்கள் வசதியை செய்து கொடுக்கின்றார்கள் நாங்களும் பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றோம் ஆனால் எந்தவித புகைப்படங்களும் எடுப்பதில்லை எந்தவித வலைத்தளங்களை பதிவேற்றம் இல்லை. அரசின் கட்டுப்பாட்டுக்கு இணங்க இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். 

நாங்கள் பிரதேச செயலாளர்கள் மூலம் நிவாரணங்களை வழங்கி வைக்கின்றோம் இதில் எங்களது கட்சியை சேர்ந்தவர்கள் கூட அங்கே செல்வதில்லை எமது வேட்பாளர்கள் கூட ஒரு புகைப்படம் கூட எடுப்பதில்லை இதனை அவர்களுடன் வலியுறுத்தி உள்ளேன்.

இது அரசியல் செய்யும் காலம் இல்லை மக்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள கட்டுப்பாடுடன் இருந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை வெளி நடமாட்டங்களை குறைத்து வீடுகளில் இருப்பதுதான் இந்த காலத்துக்கு சிறந்தது என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment