பசில் தலைமையில் பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கு ஜனாதிபதி செயலணி - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 22, 2020

பசில் தலைமையில் பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கு ஜனாதிபதி செயலணி

பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்துள்ளார். 

அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இச்செயலணி அமைக்கப்பட்டுள்ளது. 

உலகளாவிய ரீதியில் பரவியுள்ள கொரோனா நோய்த் தொற்றுக்கு மத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார, சமூக சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தி பொருளாதார புத்தெழுச்சியை திட்டமிடுதல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய பொறுப்புகள் இச்செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளன. 

'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கொள்கைகளை அடிப்படையாக கொண்டு புதிய வாயில்களின் ஊடாக இந்நாட்டுக்கே தனித்துவமான பொருளாதார சட்டகமொன்றை அமைப்பதன் மூலம் உற்பத்திப் பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவதற்காக குறித்த நிறுவனங்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல் செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பாகும். 

சுதேச கைத்தொழிலாளர்கள், தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் மக்கள் மைய பொருளாதாரமொன்றை தாபிப்பதற்கு இணைந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல் செயலணியின் மற்றுமொரு பணியாகும். 

மக்கள் வாழ்க்கையை இயல்புநிலையில் பேணுவதற்காக சுகாதார, கல்வி செயலணிகளின் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து உற்பத்திகளை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இச்செயலணியின் பணியாகும். 

எவரேனும் ஒரு அரச ஊழியர் அல்லது ஒரு அமைச்சு, அரச திணைக்களம், அரச கூட்டுத்தாபனம் அல்லது வேறு அதுபோன்றதொரு நிறுவனம் இச்செயலணியினால் வழங்கப்படும் கடமை அல்லது பொறுப்பினை நிறைவேற்றத் தவறுதல் அல்லது காலம் தாழ்த்துதல் அல்லது அதுபோன்ற அனைத்து சந்தர்ப்பங்கள் குறித்தும் ஜனாதிபதிக்கு அறிக்கையிடுமாறும் செயலணிக்கு பணிக்கப்பட்டுள்ளது. 

2020 ஜனவரி 24, 2020 மார்ச் 24 ஆம் திகதிய வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார அபிவிருத்திக்கான செயலணி மற்றும் 2020 மார்ச் 23ஆம் திகதிய கொரோனா வைரஸை இலங்கையிலிருந்து ஒழிப்பதில் அதிக இடர்நிலைக்கு முகம்கொடுத்துள்ள மாவட்டங்களின் மக்களின் வாழ்க்கையை இயல்புநிலையில் பேணுவதற்கு தேவையான சேவைகளை முறையாக முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணி ஆகியவற்றை தாபிப்பதற்குரிய ஏற்பாடுகள் இத்துடன் இரத்துச் செய்யப்படுகின்றது. 

பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவுள்ளது. 

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பசில் ராஜபக்ஷ இச்செயலணியின் தலைமைப் பொறுப்பை வகிக்கின்றார். 

பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர்களான என்டன் பெரேரா மற்றும் டீ.எஸ்.ஜயவீர ஆகியோர் இணை செயலாளர்களாக உள்ளனர். 

செயலணி உறுப்பினர்களின் முழுமையான பெயர்ப்பட்டியில் வருமாறு 

01. பசில் ராஜபக்ஷ - ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி 

02. கலாநிதி நந்தலால் வீரசிங்க - சிரேஷ்ட பிரதி ஆளுநர், இலங்கை மத்திய வங்கி 

03. லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா - பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி/இராணுவத் தளபதி 

04. சீ.டீ. விக்ரமரத்ன - பதில் பொலிஸ் மா அதிபர் 

05. மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஷாந்த திஸாநாயக - தலைவர், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை 

06. ஜே.ஏ.நுஷாட் எம். பெரேரா - தலைவர், கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் 

07. சுசன்த ரத்னாயக - தலைவர், இலங்கை முதலீட்டுச் சபை 

08. ஜயந்த டி சில்வா - தலைவர், இலங்கை தகவல், தொலைத்தொடர்பு தொழிநுட்ப நிறுவனம் 

09. திருமதி கிமாலி பெர்னாண்டோ - தலைவர், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை 

10. ஜயம்பதி மொல்லிகொட - தலைவர், இலங்கை தேயிலை சபை 

11. பிரபாத் சுபசிங்க - தலைவர், ஏற்றுமதி அபிவிருத்தி சபை 

12. ஏ.விமலவீர - தொழில் ஆணையாளர் நாயகம் 

13. எஸ். சிங்கப்புலி - கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் 

14. ரியர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) ஆனந்த பீரிஸ் - பணிப்பாளர் நாயகம், சிவில் பாதுகாப்பு திணைக்களம் 

15. மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.விஜித ரவிப்பிரிய - பணிப்பாளர் நாயகம், இலங்கை சுங்கம் 

16. பந்துல திலகசிறி - பணிப்பாளர் நாயகம், சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம் 

17. சஞ்ஜய மொஹொட்டால - பணிப்பாளர் நாயகம், இலங்கை முதலீட்டுச் சபை 

18. மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுதன்த ரணசிங்க - பணிப்பாளர் நாயகம், இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் 

19. மகேஷ் கம்மன்பில - பணிப்பாளர், உர செயலகம் 

20. புத்திக மடிஹஹேவா - பொது முகாமையாளர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 

21. ரொஹான் செனவிரத்ன - மேலதிக செயலாளர், இலங்கை மின்சார சபை 

22. மனோ சேகரம் - பணிப்பாளர் சபை உறுப்பினர், இலங்கை தகவல், தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனம் 

23. மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுமேத பெரேரா 

24. சஞ்சீவ குணவர்த்தன - நிறைவேற்று அதிகாரி, ஈ.டபிள்யு.கிரேஸி அன் கம்பனி 

25. சமன்த குமாரசிங்க - தலைவர், நேசர்ஸ் சீக்ரட் நிறுவனம் 

26. மகேஷ் அமலியன் - தலைவர், மாஸ் ஹோல்டிங்ஸ் 

27. கலாநிதி ரவீ லியனகே - தலைவர், ரைகம் மார்கடிங் சர்விஸஸ் 

28. பத்மலால் விதானகே - முகாமைத்துவ பணிப்பாளர், சென்மிக் வியாபார குழுமம் 

29. எஸ்.பீ. திவாரத்ன - ஓய்வுபெற்ற பிரதி திறைசேறி செயலாளர் 

30. பிரதமரின் செயலாளர், நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி, வீதி மற்றும் நெடுஞ்சாலைகள், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி, பெருந்தோட்ட கைத்தொழில், ஏற்றுமதி விவசாயம், கைத்தொழில், வழங்கள் முகாமைத்துவம், மின்சக்தி, எரிசக்தி, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு, மகாவலி, விவசாய, நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி, நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டு வசதிகள், பாதுகாப்பு, உள்ளக வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன்பேணல் அமைச்சுக்களின் செயலாளர்கள். 

No comments:

Post a Comment

Post Bottom Ad