தற்போதைய சூழலில், சிலர் தமது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இனவாத, மதவாத அப்படையில் செயற்படுகின்றனர் - ஐக்கிய தேசிய கட்சி - News View

Breaking

Post Top Ad

Sunday, April 5, 2020

தற்போதைய சூழலில், சிலர் தமது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இனவாத, மதவாத அப்படையில் செயற்படுகின்றனர் - ஐக்கிய தேசிய கட்சி

(எம்.மனோசித்ரா) 

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தற்போதைய சூழலில், சிலர் தமது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இனவாத, மதவாத அப்படையில் செயற்படுகின்றமை கவலைக்குரியது. இது போன்ற செயற்பாடுகளை அறிவுடைய மக்கள் சமூகம் புரிந்து செயற்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் இனவாதமாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது கொரோனா வைரஸ் பரவலிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு அனைத்து பிரஜைகளுக்கும் இருக்கிறது. இதுபோன்ற முக்கியமான தருணத்தில் மக்கள் அனைவரும் ஒரே இலக்கிற்காக ஒன்றிணைந்து கொரோனாவிலிருந்து நாட்டை மீட்ப்பதற்காக பாடுபட வேண்டும். 

எனினும் இது போன்றதொரு சந்தர்ப்பத்தில் சிலர் இனவாத அடிப்படையிலும் மதவாதமாகவும் செயற்படுகின்றமை அச்சுறுத்தலான நிலைமையாகும். 

குறுகிய இனவாதம் மற்றும் மதவாதத்தை சமூகத்தினுள் பரப்புவதற்காக தமத சகோதர மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது அரசியல் இலாபம் பெற்றுக் கொள்வதற்காகவோ மனிதர்கள் அதிகளவு மதிக்கின்ற மதத்தை தனி நபர் அல்லது ஒரு குழு பயன்படுத்திக் கொள்ளுமானால் அது கவலைக்குரிய வியடமாகும். 

கடந்த காலத்திலும் இதுபோன்ற ஒரு குழு தமது அரசியல் நோக்கத்திற்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் சமூகத்தினுள் பரப்புவதற்காக செயற்பட்டனர். மீண்டும் இது போன்ற குழுக்கள் இவ்வாறு செயற்பட எத்தனித்தால் அறிவுடைய மக்கள் சமூகம் அதனை புரிந்துகொள்ள வேண்டும். 

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழப்பவர்களை தகனம் செய்வது அல்லது புதைத்தல் பற்றி உலக சுகாதார ஸ்தாபனம் சில வழிமுறைகளைக் கூறியுள்ளது. 

உலக சுகாதார அமைப்பானது அனைத்து அங்கத்துவ நாடுகளினதும் இனம், மதம் என்பவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படும் அமைப்பாகும். அத்தோடு இந்த வைரஸ் பரவலின் போது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச மட்டத்தில் தீர்மானங்களை எடுக்கும் ஒரு அமைப்பாகவும் இருக்கிறது. 

இவ்வாறான அமைப்பின் தீர்மானங்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கான உரிமை அனைவருக்கும் இருக்கிறது. அந்த உரிமைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். 

எனினும், தற்போதைய சூழலில் ஒவ்வொரு தரப்புக்களை வெவ்வேறு விதமாக அணுக முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும். இதுவரையில் இது போன்ற குழுக்கள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது முதல் மக்களின் பிரச்சினைகளை வெளிக் கொண்டு வருவது வரை குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றமை தெரிகிறது.

வீரகேசரி

No comments:

Post a Comment

Post Bottom Ad