தாய் இறந்து 3 நாட்களில் பிரபல நடிகர் இர்பான் கான் மரணம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 29, 2020

தாய் இறந்து 3 நாட்களில் பிரபல நடிகர் இர்பான் கான் மரணம்

ஸ்லம்டாக் மில்லியனர், இன்பர்னோ (inferno), லைப் ஆப் பை (life of pi) ஆகிய ஹொலிவூட் படங்களிலும் பிகு ((pigu)) உள்ளிட்ட பொலிவூட் படங்களிலும் நடித்துள்ள பிரபல நடிகர் இர்பான் கான் உயிரிழந்துள்ளார். 

இர்பான் கானுக்கு புற்று நோய் இருப்பது கடந்த 2018 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார். 

ஊரடங்கு உத்தரவால் மும்பையில் இருந்த இர்பான் கானின் உடல்நலம் நேற்று திடீரென்று மோசமானது. இதையடுத்து மும்பையில் உள்ள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 54 வயதில் இர்பான் இன்று உயிரிழந்தார். 

பல மாதங்களாக தைரியமாக புற்று நோயுடன் போராடி வந்த இர்பான் மறைந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

முன்னதாக இர்பான் கானின் அம்மா சயீதா பேகம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இந்தியாவில் ஜெய்பூரில் காலமானார். அவரின் முகத்தை கடைசியாக நேரில் பார்க்க முடியாமல் வீடியோ அழைப்பின் மூலம் பார்த்து அழுதார் இர்பான். 

தாய் இறந்த 3 நாட்களில் மகனும் இறந்துள்ளமை ரசிகர்களை கவலை அடையச் செய்திருக்கிறது. 

புற்று நோய்க்காக சிகிச்சை பெற்றபோது இர்பான் நடித்த அங்ரேஜி மீடியம் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad