கல்விச் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற எம்.எஸ்.கலீலுர் ரஹ்மான் அவர்களின் 38 வருட கால சேவைக்கு சட்டத்தரணி ஹபீப் றிபான் வாழ்த்து - News View

Breaking

Post Top Ad

Friday, April 24, 2020

கல்விச் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற எம்.எஸ்.கலீலுர் ரஹ்மான் அவர்களின் 38 வருட கால சேவைக்கு சட்டத்தரணி ஹபீப் றிபான் வாழ்த்து

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய எம்.எஸ்.கலீலுர் ரஹ்மான் இன்று 24.04.2020ம் திகதியுடன் சுமார் 38 வருட கால கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

இவர் 38 (1982-2020) வருட கால சேவையில் ஆசிரியராகவும், பிரதி அதிபராகவும், ஆசிரிய ஆலோசகராகவும், கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் சிறப்பாக தனது கடமைகளை எமது பிரதேச மக்களுக்கு வழங்கியதையிட்டு மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் சட்டத்தரணி ஹபீப் றிபான்.

சட்டத்தரணி ஹபீப் றிபான் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தனது சேவைக் காலத்தில் கூடுதலான காலத்தினை வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலையில் செலவழித்து அந்-நூர் பாடசாலை அபிவிருத்தி மற்றும் அப்பிரதேச மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் முன்னெடுத்துள்ளார். 

இது தவிர சமூகம் சார்ந்த பல்வேறு விடயங்களிலும் ஆழமான கருத்துக்களை கொண்டுள்ளதுடன் பல்வேறு பங்களிப்பினையும் மேற்கொண்டுள்ளார்.

மேலும் எமது பிரதேசத்தில் எதிர்காலங்களில் எமது முயற்சிகள் மூலம் அல்லது பொது நிருவனங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகின்ற கல்வி ரீதியான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு முன்வந்து பெறுமதியான ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவார் என்று எதிர்பார்க்கின்றேன் என சட்டத்தரணி ஹபீப் றிபான் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad