மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற மோதலில் 19 போதைப் பொருள் கடத்தல்கார்கள் பலி - News View

Breaking

Post Top Ad

Sunday, April 5, 2020

மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற மோதலில் 19 போதைப் பொருள் கடத்தல்கார்கள் பலி

மெக்ஸிகோவின் வடக்கு எல்லை மாநிலமான சிவாவாவில் போதைப் பொருள் கடத்தற்காரர்களுக்கு இடையிலான பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

'Chuchuichupa' என்ற கிராமத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில், மோதல் நடந்த இடத்தில் 18 சடலங்களையும், இரண்டு கையெறி குண்டுகளையும், வாகனங்கள் மற்றும் துப்பாக்கிகள் என்பவற்றை கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர். 

அதேவேளை, உயிரிழந்த ஒருவரின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சிக்கும்போதே குறித்த இரு குற்றவியல் குழுக்களும் இவ்வாறு மோதலில் ஈடுபட்டுள்ளதாக மெக்ஸிகோவின் சட்டத்தரணிகள் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad