இந்தியாவின் புதுடில்லியிலிருந்து 143 மாணவர்கள் இலங்கையை வந்தடைந்தனர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 29, 2020

இந்தியாவின் புதுடில்லியிலிருந்து 143 மாணவர்கள் இலங்கையை வந்தடைந்தனர்

கொரோனா தொற்றுக் காரணாக இந்தியாவின் புதுடில்லியில் சிக்கித் தவித்த 143 இலங்கை மாணவர்களை கொண்ட குழுவினர் இன்று மாலை நாடு திரும்பியுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல் -1196 என்ற விசேட விமானம் மூலமாகவே புதுடில்லியிலிருந்து பிற்பகல் 1.40 மணியளவில் இலங்கை நோக்கி புறப்பட்ட இவர்கள், மாலை 4.35 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டவர்கள் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில் கொரோனா தொற்று தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
இதுவரை 946 இலங்கை மாணவர்கள் நான்கு நாடுகளிலிருந்து சிறப்பு விமானங்கள் மூலமாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

இவர்களில் 684 பேர் இந்தியாவின் ஐந்து விமான நிலையங்களிலிருந்து சிறப்பு விமானம் மூலமாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

மேலும் பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூரிலிருந்து 113 மாணவர்களும், நேபாளத்தின் காத்மண்டுவிலிருந்து 76 மாணவர்களும், பங்களாதேஷின் டாக்காவிலிருந்து 73 மாணவர்களும் இலங்கை விமான சேவையின் சிறப்பு விமானங்களின் உதவியுடன் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

இவ்வாறு அழைத்து வரப்பட்ட மாணவர்கள் அனைவரும் சுகாதார அமைச்சின் கீழ் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad