சீனிக்கு 100 ரூபா உச்சபட்ச சில்லறை விலை இரத்து - அதி விஷேட வர்த்தமானி வெளியீடு - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 29, 2020

சீனிக்கு 100 ரூபா உச்சபட்ச சில்லறை விலை இரத்து - அதி விஷேட வர்த்தமானி வெளியீடு

வெள்ளைச் சீனி ஒரு கிலோ கிராமின் விலை ரூபா 100 ஆக உச்சபட்ச விலை விதிக்கப்பட்ட அதி விஷேட வர்த்தமானியை இரத்துச் செய்வதாக பாவனையாளர் அலுவல்கள அதிகார சபை அறிவித்துள்ளது.

அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பொன்றின் மூலம் சபை இதனை அறிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட 2092/64 எனும் குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட 52ஆம் மற்றும் 53ஆம் இலக்க கட்டளைகளை இரத்துச் செய்வதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தவிசாளர் மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தல் வருமாறு...
52ஆவது மற்றும் 53ஆவது கட்டளைகள் கொண்ட இரத்துச் செய்யப்பட்ட 2092/64 இலக்கம் கொண்ட அதி விஷேட வர்த்தமானி வருமாறு...

No comments:

Post a Comment

Post Bottom Ad