கல்முனை ஸாஹிரா கல்லூரியின் Metropolitan ZPL Premier League - 2020 சம்பந்தமாக விளக்கமளிக்கும் ஊடக மாநாடு - News View

Breaking

Post Top Ad

Monday, March 2, 2020

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் Metropolitan ZPL Premier League - 2020 சம்பந்தமாக விளக்கமளிக்கும் ஊடக மாநாடு

பாறுக் ஷிஹான்

கல்முனை சாஹிரா பழைய மாணவர்கள் ஒன்றியத்தினால் Metropolitan ZPL Premier League - 2020 கிரிக்கெட் சுற்றுபோட்டி தொடர் சம்பந்தமாக விளக்கமளிக்கும் ஊடக மாநாடு ஞாயிற்றுக்கிழமை (01) இரவு பாடசாலையின் காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இச்சுற்றுத் தொடர் எதிர்வரும் ஏப்ரல் 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் இறுதிப் போட்டி ஏப்ரல் 13 ஆம் திகதி நடைபெறும்.

இச்சுற்றுப் போட்டி அணிக்கு 11 பேர் கொண்ட 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளாக இடம்பெறும்.இச்சுற்றுப் போட்டியில் 29 அணிகள் மோதவுள்ளன.

வெற்றி பெறும் அணிக்கு ரூபா 25 ஆயிரம் ரொக்கமும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்படும்.இரண்டாம் அணிக்கு ரூபா 15 ஆயிரம் ரொக்கமும் கிண்ணமும் வழங்கப்படும்.போட்டிகள் யாவும் சாஹிரா மைதானத்தில் நொக் அவுட் முறையில் இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad