நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு செயற்படுவாம் - முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் - News View

Breaking

Post Top Ad

Monday, March 23, 2020

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு செயற்படுவாம் - முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்

உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயினை நாம் நாளாந்தம் ஊடகங்கள் மூலம் அறிய முடிகின்றது. எமது நாட்டிலும் அதன் தாக்கம் அதி வேகமாக பரவி வருவதை அவதானிக்கின்றோம். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இக்கொடிய நோயினை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் அரசாங்கம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து பொதுமக்களை பாதுகாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

அரசாங்கத்தின் அறிவுருத்தல்களுக்கு அமைவாக பாதுகாப்புப் படையினர், வைத்தியத்துறையினர் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் மிகவும் காத்திரமான பணிகளை மேற்கொள்கின்றனர் இத்தருணத்தில் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு பொதுச் சேவை அமைப்புக்களின் தியாகத்தையும் நினைவூட்டுகின்றேன்.

இத்தருணத்தில் பொதுமக்கள் மிகவும் விழிப்போடும், அவதானத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருந்து தங்களையும் தங்களது குடும்பங்களையும் பாதுகாப்பது கட்டாய கடமையாகும்.

இத்தொற்று நோயானது மிகவும் இலகுவாக பரவக்கூடியதாக இருப்பதால் பொது இடங்களில் ஒன்றுகூடல்களை தடுத்து அரசாங்கத்தின் சட்டதிட்டங்களை மதித்து வீடுகளில் தங்கி இருக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் இவ்வாறான சூழ்நிலையில் ஆன்மீக செயற்பாடுகளை மேற்கொண்டு தொழுகைகள் மூலம் இறைவனிடத்தில் துவா பிராத்தனைகளை மேற்கொண்டு எமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்வோம்.

இத் தொற்று நோயில் இருந்து எமது உறவுகளும் எமது நாடும் முழு உலகமும் விடுபட்டு சக ஆரோக்கியத்தோடு வாழ வள்ள இறைவனை வேண்டி நிற்கின்றேன் ஆமீன்.

ஊடகப்பிரிவு

No comments:

Post a Comment

Post Bottom Ad