பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்ட தகவல்களில் குறிப்பிடப்பட்ட மூன்று குழந்தைகள் அவர்களது பெற்றோருடன் சுய தனிமைப்படுத்தலில் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 26, 2020

பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்ட தகவல்களில் குறிப்பிடப்பட்ட மூன்று குழந்தைகள் அவர்களது பெற்றோருடன் சுய தனிமைப்படுத்தலில்

(எம்.மனோசித்ரா) 

வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்து அண்மையில் பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்ட தகவல்களில் குறிப்பிடப்பட்ட மூன்று குழந்தைகள் அவர்களது பெற்றோருடன் பாதுகாப்பான முறையில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவினால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 

அண்மையில் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்பியவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தம்மை பதிவு செய்ய வேண்டும் என்று பொலிஸ் தலைமையகத்தினால் கோரப்பட்டது. 

எனினும் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த போதிலும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யாதவர்கள் தொடர்பில் கடந்த 23 ஆம் திகதி திங்கட்கிழமை பொலிஸ் தலைமையகத்தினால் தகவல்கள் வெளியிடப்பட்டன. 

அவ்வாறு வழங்கப்பட்ட தகவல்களில் முதலாம் இலக்கமிடப்பட்டிருந்த Bethany Nihinsa Somapalage இரண்டாம் இலக்கமிடப்பட்டிருந்த Martina Hakmana Vidana Arachchige மற்றும் மூன்றாம் இலக்கமிடப்பட்டிருந்த Shenol Abaheesha Vindiv Hewage என்ற குழந்தைகள் மூவரும் அவர்களது பெற்றோருடன் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

எனவே மேற்குறிப்பிட்ட குழந்தைகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அத்தோடு இது தொடர்பில் குறித்த குழந்தைகளுடைய பெற்றோர் ஏதேனும் அசௌகரியங்களுக்கு கவலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment