எதிஹாட் விமான சேவை இடைநிறுத்தப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 24, 2020

எதிஹாட் விமான சேவை இடைநிறுத்தப்பட்டது

(நா.தனுஜா) 

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தரையிறங்குகின்ற மற்றும் அங்கிருந்து புறப்படுகின்ற தனது அனைத்து விமானங்களையும் எதிஹாட் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தியிருக்கிறது. 

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய அவசர கால நெருக்கடி நிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரச பை சிவில் விமான சேவைகள் அதிகார சபை என்பவற்றினால் சகல உள்வரும் வெளிச் செல்லும் மற்றும் இடையில் தரித்துச் செல்லும் விமான சேவைகளையும் இடைநிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அடுத்தே எதிஹார் விமான சேவையும் தனது சேவைகளை நிறுத்தியிருக்கிறது. 

உலகலாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் அதிலிருந்து தமது மக்களைப் பாதுகாப்பதற்குமே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த விமான சேவைகளின் இடைநிறுத்தமானது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேரப்படி இன்று புதன்ழகிழமை நள்ளிரவு 11.59 மணியிலிருந்து அமுலுக்கு வருவதுடன், எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த இடைநிறுத்தம் தொடரும். 

அடுத்த கட்டத் தீர்மானங்கள் உரிய அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும். எனினும் கார்கோ மற்றும் அவசர விமான சேவைகள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தப்படும என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad