மக்களுக்கு சொல்லுவதை செய்து காட்டும் வேலைத்திட்டத்தினை எமது பிரதமரோடு ஒன்றினைந்து முன்னெடுப்போம் - News View

Breaking

Post Top Ad

Sunday, March 1, 2020

மக்களுக்கு சொல்லுவதை செய்து காட்டும் வேலைத்திட்டத்தினை எமது பிரதமரோடு ஒன்றினைந்து முன்னெடுப்போம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாரிய வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பெருபான்மையை நிருபித்து இந்த நாட்டு மக்களுக்கு சொல்லுவதை செய்து காட்டும் வேலைத்திட்டத்தினை எமது பிரதமரோடு ஒன்றினைந்து முன்னெடுத்து காட்டுவோம் என புகையிரத இராஜாங்க அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (01) பூண்டுலோயா பகுதியில் புதிதாக நிர்மாணிக்கபட உள்ள பொதுச்சந்தைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், எதிர்வரும் காலங்களில் எமது புதிய பிரதமரின் ஊடான சுதந்திரமான தீர்மானத்தை பெற்று கொள்ளும் நோக்கிலும் இந்த நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டு செல்லவும் தொழில் வாய்ப்பினை பெற்றுத் தரக் கூடிய பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்போம்.

நாளை இரவு பாராளுமன்றத்தை அரசாங்கம் கலைக்குமாயின் ஏப்ரல் மாதம் 25 ஆம் பொதுத் தேர்தல் இடம்பெறும் என்பது தான் எமது எதிர்பார்ப்பாகும். 

ஆட தெரியாதவனுக்கு வீதி கோனல் என ஒரு பழ மொழி உள்ளது. சஜித் பிரேமதாச என்பவர் ஜனாதிபதி தேர்தலின் போது ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பாரிய தோல்வியடைந்தார். அவ்வாறு தோல்வியடைந்தவருக்கு எப்படி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும்.

நாங்கள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்து இன்றோடு நூறு நாட்கள் கடந்துள்ளது. இந்த நூறு நாள் கடந்துள்ள நிலையில் தற்பொழுது நாம் பொதுத் தேர்தலை சந்திக்க தயாராகவுள்ளோம்.

மலையக நிருபர் சதீஸ்குமார்

No comments:

Post a Comment

Post Bottom Ad