எனது மகனுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படவில்லை - அமைச்சர் மஹிந்த அமரவீர - News View

Breaking

Post Top Ad

Thursday, March 19, 2020

எனது மகனுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படவில்லை - அமைச்சர் மஹிந்த அமரவீர

ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து வந்த என்னுடைய மகனுக்கு, எந்ததொரு விசேட சலுகைகளும் வழங்கப்படவில்லை. சாதாரண மக்களை போன்றே தியத்தலாவ தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளாரென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து வருகை தந்த மஹிந்த அமரவீரவின் மகனுக்கு மாத்திரம் விசேட சலுகைகள் வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகிய செய்திக்கு மறுப்பு தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளதாவது,“என்னுடைய மகன், ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து சிறப்பு விமானமொன்றின் ஊடாக நாட்டை வந்தடைந்ததாகவும் அதனைத் தொடர்ந்து தியத்தலாவ தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட எனது மகனுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதை நான் கண்டேன். அவை உண்மைக்கு புறம்பானவை.

எனது மகன்,எமிரேட்ஸ் விமானம் மூலமே இலங்கைக்கு வந்தார். இலங்கைக்கு வருவோரை தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லும் சாதாரண பேருந்திலேயே மற்றையவர்களுடன் இணைந்து, அவரும் தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad