நோய் அபாயத்தை பயன்படுத்தி கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வதா ? சர்வதேச மன்னிப்புச் சபை சாடல் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 26, 2020

நோய் அபாயத்தை பயன்படுத்தி கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வதா ? சர்வதேச மன்னிப்புச் சபை சாடல்

இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்கும் கடப்பாடு மிகவும் குறைவானதாக காணப்படும் நிலையில் மிருசுவில் படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சார்ஜன்ட் ரத்நாயக்காவை விடுதலை செய்வது என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தன்னிச்சையான தீர்மானம் மிகவும் கவலை அளிக்கும் செய்தியை தெரிவித்துள்ளது என சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார். 

பயங்கரமான குற்றங்களை இழைத்த படைவீரர்கள், நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டாலும் மன்னிப்பளித்து விடுதலை செய்யப்படுவார்கள் என்ற கவலை தரும் செய்தியை இந்த விடுதலை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வேளையில் வழங்கிய இந்த விடயத்துடன் தொடர்புடைய ஏனைய வாக்குறுதிகள் குறித்தும் சர்வதேச மன்னிப்புச் சபை கவலை வெளியிட்டுள்ளது. 

பாரிய நோய்த் தொற்று அபாயத்தை பயன்படுத்தி பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது கண்டிக்கத்தக்க விடயம் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக்கான உரிமைகள் உள்ளன, நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கடப்பாடு இலங்கைக்குள்ளது எனவும் தெரிவித்துள்ள அவர் பல வருடங்களுக்கு பின்னர், மிருசுவில் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் 2015 இல் நீதியை அனுபவித்துள்ளனர், ஜனாதிபதியின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால் நீதி தலைகீழாக மாற்றப்படுவது வெறுக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.

வீரகேசரி

No comments:

Post a Comment