ஜனாதிபதியின் அழகிய நாடு தொனிப் பொருளில் சிரமதானமும், மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 1, 2020

ஜனாதிபதியின் அழகிய நாடு தொனிப் பொருளில் சிரமதானமும், மரக்கன்றுகள் நடும் நிகழ்வும்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மீராவோடை பகுதிகளில் சமுர்த்தி பயனாளிகளால் சிரமதான நிகழ்வுகளும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களின் அழகிய நாடு என்ற தொனிப் பொருளில் இவ்வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக மீராவேடை மேற்கு கிழக்கு பகுதிகளுக்கு பொருப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் முகம்மட் சாக்கிர் தெரிவித்தார் .

மீராவோடை மேற்கு, கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளில் காணப்படும் பொது இடங்களான கிராமிய வைத்தியசாலை, பாடசாலைகள், நீர் ஓடைகள், தாய்மார்களின் கிளினிக் சென்ரர் போன்ற இடங்களில் சிரமதான பணிகளில் சமுர்த்தி பயனாளிகள் ஆண்கள் பெண்கள் பலரும் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களின் அழகிய நாடு என்ற தொனிப் பொருளில் இவ்வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக மீராவேடை மேற்கு கிழக்கு பகுதிகளுக்கு பொருப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் முகம்மட் சாக்கிர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இவ்வேலைத் திட்டங்களை சகல அரச தரப்பு உத்தியோகத்தர்களும் பல்வேறு பகுதிகளாக பிரிந்து இச்சிரமதான பணிகளை செய்து நாட்டை அழகுபடுத்தி சுபீட்சைத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முயற்சிகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

ஓட்டமாவடி நிருபர் அ.ச.மு.சதீக்

No comments:

Post a Comment