சிம்பாப்வேயில் கொரோனா வைரசிற்கு ஊடகவியலாளர் பலி - News View

Breaking

Post Top Ad

Monday, March 23, 2020

சிம்பாப்வேயில் கொரோனா வைரசிற்கு ஊடகவியலாளர் பலி

சிம்பாப்வேயின் ஊடகவியலாளர் ஜொரோரோ மகம்பா கொரோனா வைரசிற்கு பலியாகியுள்ளார். சிம்பாப்வேயின் சுகாதார அமைச்சர் இதனை உறுதி செய்துள்ளார். 

ஜொரோரோ மகம்பா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதை சற்று முன்னர் அறிந்தேன், மிகப்பெரும் திறமையை கொண்டிருந்த ஜாம்பவான் உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். 

சனிக்கிழமை ஊடகவியலாளருக்கு நோய் தொற்றிருப்பது உறுதியான நிலையில் அவரது உடல் வேகமாக மோசமடைந்தது என சிம்பாப்வே தகவல்கள் தெரிவித்துள்ளன. 

ஜொரோரோ மகம்பா சிம்பாப்வேயின் செல்வந்த குடும்பத்தினை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மரணம் கொரோனா வைரசினால் இளம் வயதினருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்பதை மீண்டும் புலப்படுத்தியுள்ளது. 

சிம்பாப்வேயில் இதுவரை இருவர் வைரஸ் தொற்றிற்குள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

உலகில் ஒரு காலப்பகுதியில் சிறந்த வைத்திய சேவைகளை கொண்டிருந்த சிம்பாப்வேயில் தற்போது வலி நிவாரணிகள் கையுறைகள் முகக் கவசங்களிற்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. வென்டிலேட்டர்ஸ் ஓக்சிசன் சாதனங்கள் போன்றவற்றிற்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. 

இந்த நிலையில் ஏற்கனவே சிம்பாப்வே மக்கள் பெருமளவில் ஒன்று கூடுவதை தவிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad