முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு பொய் சாட்சியம் அளித்துள்ளார் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 1, 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு பொய் சாட்சியம் அளித்துள்ளார்

(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஏப்ரல் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மைத்திரிபால சிறிசேன உடனடியாக நாடு திரும்ப சந்தர்ப்பம் இருந்தும் வராமல் இருந்ததன் மூலம் இது தொடர்பாக அவர் முன்கூட்டியே அறிந்திருந்தாரா என்ற சந்தேகம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

ஏப்ரல் குண்டுத் தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பிரசாரம் செய்தே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அரசாங்கம் இது தொடர்பாக எந்த விசாரணையையும் மேற்கொள்ளவில்லை. 

அத்துடன் ஏப்ரல் தாக்குதல் தொடர்பாக மேற்கொண்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவின் விசாரணையின்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடவும் வாக்குமூலம் பெற்றுக் கொண்டோம்.

அவரது வாசஸ்தலத்துக்கு சென்று இது தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக் கொள்ளும்போது, குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற தினத்தில் சிங்கப்பூரில் இருந்த உங்களுக்கு உடனடியாக நாடு திரும்ப முடியாமல் போனதற்கு காணரம் என்ன என கேட்டபோது, ஸ்ரீலங்கன் எயார்லைன் விமானத்தில் அன்றையதினம் ஆசனம் இருக்கவில்லை. அதனால்தான் வரமுடியாமல் போனது என அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இது தொடர்பாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் அதிகாரிகள் சிலரை பாராளுமன்ற விசாரணைக் குழுவுக்கு அழைத்து கேட்போது, குறிப்பிட்ட தினத்தில் 20 க்கும் அதிகமான ஆசனங்கள் மீதமிருந்ததாக சாட்சியமளித்திருந்தார்கள். இந்த விடயங்கள் அறிக்கையில் எழுதப்பட்டிருக்கின்றன.

அப்படியாயின் முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு பொய் சாட்சியம் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அறிந்துகொண்டுதான் அவர் இவ்வாறு செயற்பட்டாரா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. அதனால் அரசாங்கம் இது தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவை விசாரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment