உறவுகள் இன்றி அனாதைகள் போல மருத்துவமனைகளில் மரணிக்கும் நோயாளிகள் - மனதை வருத்தும் சம்பவங்கள் என்கின்றனர் இத்தாலி மருத்துவர்கள் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 19, 2020

உறவுகள் இன்றி அனாதைகள் போல மருத்துவமனைகளில் மரணிக்கும் நோயாளிகள் - மனதை வருத்தும் சம்பவங்கள் என்கின்றனர் இத்தாலி மருத்துவர்கள்

மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் நோயாளிகள் உறவுகள் எவருமின்றி அனாதைகளாக மரணிப்பதே மிகவும் வேதனையளிக்கின்றது என இத்தாலியின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஓய்விற்கு பின்னர் மீண்டும் சேவையாற்ற திரும்பியுள்ள மருத்துவர் ரோமானோ பாவேலுசி மக்கள் அநாதைகள் போன்று மருத்துவமனைகளில் உயிரிழப்பதே சகித்துக் கொள்வதற்கு கடினமான விடயமாக உள்ளதாகவும் தான் இதனை முன்னர் எதிர்கொண்டதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

அவர்கள் நேசத்திற்குரியவர்கள் எவருமின்றி மரணிப்பதை பார்ப்பதாக தெரிவித்துள்ள இத்தாலி மருத்துவர்கள் அவர்கள் இறுதியாக தொலைபேசிகள் மூலம் தங்கள் உறவுகளுடன் இறுதி வார்த்தைகளை பேசுகின்றனர் என தெரிவிக்கின்றனர். 

சிறிய ஒக்லிபோ மருத்துவமனையில் மிக நீண்ட நேரம் பணியாற்றும் 70 மருத்துவர்களில் பவேலுச்சியும் ஒருவர். வைரஸ் காராணமாக இத்தாலியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் அவர் பணியாற்றுகின்றார். 

நாங்கள் கிட்டத்தட்ட எங்கள் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டோம், இது சிறிய மருத்துவமனை ஆனால் பெருமளவானவர்களிற்கு இடமளிக்கின்றோம், என அவர் தெரிவித்துள்ளார். 
எங்களிடம் போதிய வளங்களோ பணியாளர்களோ இல்லை என தெரிவித்துள்ள அவர் எங்கள் பணியாளர்களும் நோய் வாய்யப்பட ஆரம்பித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். 

மருத்து பணியாளர்கள் 12 மணித்தியாலம் வரை ஒவ்வொருவரும் பணியாற்றி நோயாளிகளை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள அதேவேளை நோயாளிகள் அவர்களின் உறவுகள் எதுவுமின்றி அனாதைகளாக மரணிக்கும் மனதை உருக்கும் துயரத்தை பார்க்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். 

எனினும் இது நோய் தொற்றை தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கையாக காணப்படுகின்றது. உறவினர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு என்ன நடக்கின்றது என்பதை அறிவிப்பதற்கான சேவையை ஆரம்பித்துள்ளோம் என்கின்றார் மருத்துவர். 

நோயாளிகள் தொலைபேசி மூலம் தங்கள் உறவுகளுடன் உரையாடுவார்கள் ஆனால் முதியவர்களால் அது சாத்தியமில்லை. இதனால் குடும்பத்தவர்களுடன் நாங்கள் தொடர்பிலிருக்க முயல்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரொய்ட்டர் 

No comments:

Post a Comment

Post Bottom Ad