ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Friday, March 20, 2020

ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் வீடுகளை விட்டு வௌியேறக் கூடாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், நோய் நிவாரண கட்டளைச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய தேவை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

மேலும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் தங்களின் விமான பயணச் சீட்டை, ஊரடங்கு சட்டத்தின் போது அனுமதி சீட்டாக பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad