9 இராணுவ விமானங்களில் 100 நிபுணர்களை இத்தாலிக்கு அனுப்பியது ரஷ்யா! - News View

Breaking

Post Top Ad

Monday, March 23, 2020

9 இராணுவ விமானங்களில் 100 நிபுணர்களை இத்தாலிக்கு அனுப்பியது ரஷ்யா!

கொரோனா வைரஸினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு உதவும் நோக்கில் ரஷ்யா ஒன்பது இராணுவ விமானங்களில் பல மருத்துவ உபகரணங்களையும், நிபுணத்துவம் பெற்ற இராணுவத்தினரையும் இத்தாலிக்கு அனுப்பி வைத்துள்ளது. 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சனிக்கிழமையன்று இத்தாலி பிரதமர் கியூசெப் கோண்டேவுக்கு அவசர உதவி வழங்குவதற்கு தயாராக இருப்பதாக உறுதியளித்தார். 

இந்நிலையில் புட்டினின் உத்தரவுக்கு அமையவே கிருமி நாஷினி உள்ளிட்ட மருந்துப் பொருட்கள் இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது. 

கொரோனா தொற்றினால் இத்தாலி அதிகளவாக பாதிக்கப்பட்டுள்ளது, ஐரோப்பிய நாடுகளை விட இத்தாலியில் சுமார் 60,000 பேர் அங்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 5,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad