இலங்கையில் இன்று மார்ச் 25ம் திகதி வரை பதிவாகியுள்ள கொரோனா வைரஸின் தொற்றாளர்களின் சராம்சம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 25, 2020

இலங்கையில் இன்று மார்ச் 25ம் திகதி வரை பதிவாகியுள்ள கொரோனா வைரஸின் தொற்றாளர்களின் சராம்சம்

இன்று மாலை 4.30 மணி வரையில் எந்தவொரு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றாளர்களும் நாட்டில் இன்றைய தினம் 25ம் திகதி பதிவாகவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இதுவரை இலங்கையில் நேற்றய தினம் 24ம் திகதி வரை கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் குணமடைந்தும் மற்றும் 102 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தற்போது மூன்று வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.

மேலும், கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 252 நபர்கள் நாடு பூராகவும் உள்ள 22 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஊடகவியலாளர் - சில்மியா யூசுப்

No comments:

Post a Comment

Post Bottom Ad