மாத்தறை - ஹம்பாந்தோட்டை வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் விரிவாக்க திட்டமும் கட்டண விபரமும்! - News View

About Us

About Us

Breaking

Saturday, February 22, 2020

மாத்தறை - ஹம்பாந்தோட்டை வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் விரிவாக்க திட்டமும் கட்டண விபரமும்!

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்கள் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளார். 

இந்தப் பகுதி இலங்கையில் இதுவரை அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப உயர்ந்த தரத்தில் அமைக்கப்படும் அதிவேக வீதியாகும்.

இதன் மூலம் கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட் வரையான போக்குவரத்து பயணம் விரைவு படுத்தப்பட்டுள்ளது. மாத்தறை ஹம்பாந்தோட்டைக்கு இடையிலாக அமைக்கப்படும் இந்த வீதிக்காக 16 ஆயிரத்து 870 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.

மாத்தறையிலிருந்து பரவாகும்புகா வரையிலான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களை நிறைவு செய்தது கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் வெளிப்புறம் ஆகியவற்றுடன் இணைப்பதன் மூலம் கட்டுநாயக்க, விமான நிலையத்திலிருந்து ஹம்பாந்தோட்டையின் மத்தள விமான நிலையத்திற்கான பயணம் இதன் மூலம் இலகு படுத்தப்படுகிறது. வீதி அபிவிருத்தி அதிகாரி சபை தெரிவித்துள்ளது. 

அதன்படி இந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் புதிய விரிவாக்கத்தின் கட்டண விபரங்கள் ஆனது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

Accordingly, vehicles with 2 axles and four wheels, user fee rates will be as follows: 
Kottawa to Hambantota – Rs. 800.00 
Kadawatha to Hambantota – Rs. 900.00 
Katunayake to Hambantota – Rs. 1,000.00 
Godagama to Hambantota – Rs. 400.00 

For vehicles with 2 axles and six wheels: 
Kottawa to Hambantota – Rs. 1,450.00 
Kadawatha to Hambantota – Rs. 1,600.00 
Katunayake to Hambantota – Rs. 1,900.00 
Godagama to Hambantota – Rs. 650.00 

For vehicles with more than 2 axles: 
Kottawa to Hambantota – Rs. 2,550.00 
Kadawatha to Hambantota – Rs. 2,800.00 
Katunayake to Hambantota – Rs. 3,150.00 
Godagama to Hambantota – Rs. 1,100.00

No comments:

Post a Comment