பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ள முத்தையா முரளிதரனின் சகோதரர்! - News View

Breaking

Post Top Ad

Sunday, February 23, 2020

பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ள முத்தையா முரளிதரனின் சகோதரர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் சகோதரர் முத்தையா பிரபாகரன் எதிவர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். 

அதன்படி அவர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். 

இது குறித்து நோர்வூட்டில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், என் தந்தை மஸ்கெலியாவைச் சேர்ந்தவர், எனவே நான் மலையக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்காக கொண்டு நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad