அரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை மேற்கொள்வதற்கு கடன் வசதி - News View

About Us

About Us

Breaking

Monday, February 24, 2020

அரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை மேற்கொள்வதற்கு கடன் வசதி

அரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கல்வி நெறியை தொடர்வதற்கு வட்டி அற்ற கடனை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்க முடியும்.

2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி அரசாங்க பல்கலைக்கழகங்களில் அனுமதியை பெற்றுக் கொள்வதற்கான தகுதியைப் பெறாத மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

உயர்தரப் பரீட்சையில் ஆகக் குறைந்தது 3 பாடங்களில் சித்தி பெற்ற மாணவர்கள் உயர் கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக மார்ச் 23 ஆம் திகதி வரையில் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

8 இலட்சம் வரையில் இதற்கான கடனை பெற்றுக் கொள்ள முடியும். 3 தொடக்கம் 4 வருடங்களில் இந்த கடனை திருப்பிச் செலுத்த முடியும். இது தொடர்பான மேலதிக விபரங்களை சுபஹ மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வேலைத்திட்டம்-2019-2021, http://www.moe.gov.lk/tamil/index.php option=com_content&view=category&id=435&Itemid=1167 என்ற இணையத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment