கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் நுரையீரலின் படங்கள் ! - News View

About Us

About Us

Breaking

Saturday, February 29, 2020

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் நுரையீரலின் படங்கள் !

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நபர் ஒருவரின் நுரையீரலை சோதைனைக்குட்படுத்தியபோது வைரஸ் இருப்பதாற்கான அடையாளங்கள் காணப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் முதன்முதலில் சீன பிரஜை ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டடிருந்தார்.
நியூயோர்க்கில் உள்ள மவுண்ட் சினாய் உடல் பரிசோதனை வைத்தியர்கள் முதலில் அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது எவ்வித தாக்கமும் ஏற்படாத நிலையில் அறிக்கைகள் வெளியாகின.

எனினும் அவரை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்தியர்கள் அவதானித்த நிலையில் அவரின் நுரையிரலில் சில மாற்றாங்கள் தெரிந்தன.
அதிக தொற்று நோயால் பாதிக்கப்பட்ட அவரின் நுரையீரல் ஸ்கேன் மூலம் ஆராய்ச்சி செய்தபோது அதில் வைரஸ் பரவி வருவதை காணக்ககூடியதாக இருப்பதை வைத்தியர்கள் அவதானித்த நிலையில் புகைப்படங்கள் மூலம் வெளியிட்டுள்ளனர்.

வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை இரு வாரங்கள் சோதனை செய்தபோதே இவ்வாறு அவரின் நுரையிரலில் வைரஸ் வளர்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
இந்நிலையில் பிரதான வைத்தியவர் ஒருவர் குறிப்பிட்ட நுரையிரலில் காணப்படும் வடிவங்களை கொவிட் - 19 என அழைக்க முடிந்ததாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை இவ்வாறான அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் கொரோனா நோயாளி ஒருவரை தனிமைப்படுத்தி அவருக்கான சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கலாம் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment