முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல் - News View

Breaking

Post Top Ad

Friday, February 14, 2020

முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.​

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை 4.37 மணிக்கு கைது செய்யப்பட்டார்.

மிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரின் விசாரணைகளுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad