சிறுவர் இல்லங்களை தரப்படுத்த நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Monday, February 24, 2020

சிறுவர் இல்லங்களை தரப்படுத்த நடவடிக்கை

சிறுவர் இல்லங்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக சிறுவர் இல்லங்களை தரப்படுத்துவதற்கான நடவடிக்கை துரிதமான முன்னெடுக்கப்படும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

3 கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ள இந்த தரப்படுத்தலில் 1 நட்சத்திரம், 2 மற்றும் 3 நட்சத்திரம் என்று வகைப்படுத்தப்படும் என்று அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதான பத்திரன தெரிவித்துள்ளார்.

சிறுவர் இல்லங்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக ஒரு நட்சத்திர சிறுவர் இல்லத்தை அடையாளப்படுத்துவதற்காக சிவப்பு நிறமும், 2 நட்சத்திர சிறுவர் இல்லத்துக்காக செம்மஞ்சள் நிறமும், 3 நட்சத்திர சிறுவர் இல்லத்துக்காக பச்சை நிறமும் பயன்படுத்தப்படவுள்ளது.

சிறுவர்களின் எண்ணிக்கைக்கு அமைவாக சிறுவர் இல்லங்களில் இட வசதி கட்டில்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி இந்த தர நிர்ணய சான்றிதழ் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad