பொதுமக்களுக்கோர் மகிழ்ச்சிகரச் செய்தி : பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி - News View

Breaking

Post Top Ad

Sunday, February 23, 2020

பொதுமக்களுக்கோர் மகிழ்ச்சிகரச் செய்தி : பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

நாடளாவிய ரீதியில், ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கான அதிகபட்ச கட்டுப்பாட்டு விலை 190 ரூபாவாக அறிக்கப்பட்ட நிலையில் பெரிய வெங்காயத்தின் விலை குறைவடைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

கொழும்பு மெனிங் சந்தையில் பிரதான வர்த்தக சங்கத்தின் பிரதான அமைப்பாளர் அனில் இந்திரஜித் இதனை தெரிவித்தார். 

இந்நிலையில், இன்றைய தினம் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 170 ரூபாவாக காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதனிடையே தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 160 தொடக்கம் 165 ரூபாவாக காணப்படுவதாக அந்த மத்திய நிலையத்தின் தலைவர் ஷாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார். 

இன்றைய தினம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 140 ஆக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், யாழ்ப்பாண சின்ன வெங்காயம் தம்புள்ளை சந்தைக்குக் கொண்டுவரப்படுவதால் அதன் விலை 300 ரூபாவாக குறைவடைந்துள்ளதாகவும் ஷாந்த ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment

Post Bottom Ad