மட்டக்களப்பில் கிராம அபிவிருத்தி கைத்தொழில் கண்காட்சியை கிழக்கு மாகாண ஆளுணர் ஆரம்பித்து வைத்தார் - News View

Breaking

Post Top Ad

Thursday, February 27, 2020

மட்டக்களப்பில் கிராம அபிவிருத்தி கைத்தொழில் கண்காட்சியை கிழக்கு மாகாண ஆளுணர் ஆரம்பித்து வைத்தார்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் செயற்படும் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையங்களில் பயிற்சி அளிக்கப்பட்ட யுவதிகளின் ஆக்கப் பொருட்களை காட்சிப் படுத்துவதற்கும் அதனூடாக சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் விசேட கண்காட்சி நேற்று (27) காலை கிழக்கு மாகாண ஆளுணர் அநுராதா ஜஹம்பத் இந்துக் கல்லூரியில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்தார்.

இக்கண்காட்சி நாளை 29 ம் திகதி நிறைவு பெறவுள்ளது. இக்கண்காட்சியில் பயிற்சி நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், ஆடை அலங்காரப் பொருட்கள், கைத்தெறி நெசவு உற்பத்திகள், ஆடவர்களுக்கான அலங்காரப் பொருடகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பரீதியில் தயாரிக்கப்பட்ட பாவனைப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் பொதுமக்கள், பாடசாலைமாணவர்கள் பார்வையிடவும் நியாய விலையில் கொள்வனவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட ஆக்கப் பொருட்களே இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகுழுத் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். வியாழேந்திரன், மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், கிழக்கு மாகாண முலமைச்சின் செயலாளர் ஏ.எல்.ஏ. அசிஸ், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, திணைக்கள உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad