குதிரையில் செல்வதனால் எனக்கு இடுப்பு சுழுக்கு நோய் குணமாகின்றது - குதிரையில் வலம் வரும் முதியவரான சபீர் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 23, 2020

குதிரையில் செல்வதனால் எனக்கு இடுப்பு சுழுக்கு நோய் குணமாகின்றது - குதிரையில் வலம் வரும் முதியவரான சபீர்

பாறுக் ஷிஹான்

காலையில் தினமும் குதிரையில் செல்வதனால் எனக்கு இடுப்பு சுழுக்கு நோய் குணமாகின்றது என கல்முனைக்குடியில் குதிரையில் வலம் வரும் முதியவரான சபீர் தெரிவிக்கின்றார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் காலையில் தினமும் தலைக்கவசம் அணிந்து கொண்டு 58 வயதுடைய குறித்த நபர் குதிரை ஒன்றில் வலம் வருகின்றார்.

அவர் குறித்த குதிரையை மருதமுனைவாசி ஒருவரிடம் இருந்து ரூபா 1 அரை இலட்சத்திற்கு கொள்முதல் செய்துள்ளதாகவும் சாதாரணமாக புல் கொடுத்து குதிரையை குளிப்பாட்டி பராமரிப்பதாகவும் தினமும் குதிரையின் பராமரிப்பிற்கு ரூபா 500 செலவாகுவதாகவும் தெரிவிக்கின்றார்.

கடந்த காலங்களில் வேளாண்மை செய்கையில் ஈடுபட்ட இம்முதியவர் இடுப்பு சுழுக்கு நோய் காரணமாக அதை இடைநடுவில் கைவிட்டுள்ளதாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment