இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக சாய்ந்தமருதில் எஸ்.எம்.றிஹான் தெரிவு - News View

About Us

About Us

Breaking

Monday, February 24, 2020

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக சாய்ந்தமருதில் எஸ்.எம்.றிஹான் தெரிவு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் போட்டியிட்ட சாலின் முஹம்மட் றிஹான் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள 20 பிரதேச செயலகங்களில் குறித்த தேர்தல் இடம்பெற்றன.

இதில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் அல் - வாஹிதியா இளைஞர் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட இவர், 379 வாக்குளைப் பெற்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது இளைஞர் சேவை அதிகாரி எம்.எச்.எம். பைஸல் அமீன் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒன்லைன் மூலமாகப் பதிவு செய்யப்பட்ட 1906 வாக்குகளில் 917 வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளன. இதில் 05 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். சாய்ந்தமருதில் இடம்பெற்ற இத்தேர்தல் 05 ஆவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலாகும்.

இத்தேர்தலில் எனக்கு பக்கபலமாக நின்று வெற்றிக்காக உழைத்த அனைத்து உடன்பிறவா சகோதரர்கள், இளைஞர், யுவதிகள், பிரதேச விளையாட்டு, கழக உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கும் மற்றும் வெளிநாட்டில் வாழும் எனது உயிர் நண்பர்கள் அனைவருக்கும் நினைவு கூர்ந்து நன்றிகளைத் தெரிவித்ததுடன் எதிர்காலத்தில் கட்சி பேதம் பாராது இளைஞர்களை ஒருகுடையின் கீழ் ஒன்றுசேர்த்து அவர்களின் ஆளுமைகளை வெளியே கொண்டு வருவதற்கான தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தில் எதிர்காலத்தில் யுவதிகளையும் உள்வாங்கி அவர்களையும் ஆளுமைமிக்கவர்களாக உருவாக்குவதும் தனது இலட்சியமாகும் என்றும் வெற்றியீட்டிய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராகத் எஸ்.எம். றிஹான் தெரிவித்தார்.

தனது ஆரம்பக் கல்வியை கமு/அல் - ஜலால் வித்தியாலயத்திலும் உயர்கல்வியை கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலும் கற்ற இவர், அல் - வாஹிதியா இளைஞர் கழகத்தின் தலைவருமாவார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் றிஹான், இஸ்மாயில் சாலின் அலியார் ராவியத்தும்மா தம்பதிகளின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment