நாட்டுக்காக நாம் காத்தான்குடியில் தேசியக் கொடி அணிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, February 28, 2020

நாட்டுக்காக நாம் காத்தான்குடியில் தேசியக் கொடி அணிவிப்பு

நாட்டுக்காக நாம் எனும் தொனிப் பொருளில் காத்தான்குடியில் இன்று (28.02.2020) ஜும்ஆத் தொழுகையின் பின்னர் தேசியக் கொடிகள் அணிவிக்கப்பட்டன.

காத்தான்குடி அரசியல் களம் குழுமத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காத்தான்குடி முதலாம் குறிச்சி பெரிய மீரா ஜும்ஆப் பள்ளிவாயலில் ஜும்ஆத் தொழுகை முடிவடைந்ததன் பின்னர் நாட்டுக்காக நாம் எனும் தொனிப் பொருளில் ஜும்ஆத் தொழுகைக்கு வந்தவர்களுக்கு இலங்கையின் தேசியக் கொடி பொறிக்கப்பட்ட இலட்சினை அணிவிக்கப்பட்டன.

காத்தான்குடி அரசியல் களம் குழுமத்தின் தலைவர் முகம்மட் றிஸ்வி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதன் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி மக்கள் இலங்கை தேசத்தை நேசிப்பவர்கள் நாட்டுக்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம் தொடர்ந்தும் நாட்டுக்காக செயற்படுவோம். நாட்டை நேசிப்பதை மையமாக கொண்டு நாட்டுக்காக நாம் எனும் தொனிப் பொருளில் தேசியக் கொடிகள் அணிவிக்கும் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்தோம் என இதன் ஏற்பாட்டாளர் காத்தான்குடி அரசியல் களம் குழுமத்தின் தலைவர் முகம்மட் றிஸ்வி தெரிவித்தார்.

இதன்போது இளைஞர்கள் தேசியக் கொடிகளை கையிலேந்தியிருந்தனர்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment

Post Bottom Ad