கொரோனா தொடர்பான அச்சம் காரணமாக ஈரான் பாராளுமன்றம் தனது பணிகளை நிறுத்தியது! - News View

Breaking

Post Top Ad

Friday, February 28, 2020

கொரோனா தொடர்பான அச்சம் காரணமாக ஈரான் பாராளுமன்றம் தனது பணிகளை நிறுத்தியது!

கொரோனா பரவல் அச்சத்துக்கு மத்தியில் ஈரானிய பாராளுமன்றம் தனது பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சட்டமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

ஈரானிய சட்டமன்றத் செய்தித் தொடர்பாளரான அசாதுல்லா அப்பாஸி கூறுகையில், மேலதிக அறிவிப்பு வரும் வரை பாராளுமன்றம் எந்த அமர்வுகளையும் நடத்தாது என்றார். 

கொரோனா வைரஸின் பரவலால் சீனாவுக்கு வெளியே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். 

தொற்று நோயை சமாளிக்க முயற்சிக்கும் பணிக்குழுவிற்கு தலைமை தாங்கிய ஒரு சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் பிரதி சுகாதார அமைச்சர் ஈராஜ் ஹரிர்ச்சி உட்பட நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரானாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதேவளை ஈரானில் கொரோனா தொடர்பான உயிரிழப்புகளும் 34 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad