மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் நிறைவேற்று முகாமையாளர் தனது கடமைப் பொறுப்பினை ஏற்றார் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 27, 2020

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் நிறைவேற்று முகாமையாளர் தனது கடமைப் பொறுப்பினை ஏற்றார்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆசிரியர் வான்மை விருத்தி மத்திய நிலையத்திற்கு கல்வியமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்ட நிறைவேற்று முகாமையாளர் தனது கடமைப்பொறுப்பினை ஏற்றுக்கொள்ளும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு வலயக் கல்விப்பணிமனையில் நடைபெற்றது.

புதிய முகாமையாளர் அசனார் றியாஸ் வலயக் கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா முன்னிலையில் பணியினை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட கல்வித் திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஆசிரியர் மத்திய நிலையத்தில் முகாமையாளராகப் பணியாற்றிய எஸ். சரீப்தீன் மரணமடைந்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய முகாமையாளர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்வி வலயத்திலுள்ள பாடசாலை ஆசிரியர்களது தொழில் வான்மையினை விருத்தி செய்யும் பணி ஆசிரியர் மத்திய நிலையத்தினூடாக நடைபெறுவதுண்டு. 

அந்த வகையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் மூன்று கல்விக் கோட்டங்களிலுள்ள 77 பாடசாலைகளில் சுமார் 1800 ஆசிரியர்கள் பணியாற்றுவதாக கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்எச்எம். றமீஸ் தெரிவித்துள்ளார். 

புதிய முகாமையாளர் ஏறாவூரைச் சேர்ந்த அசனார் றியாஸ் இலங்கை கல்வியிலாளர் சேவை தரத்தையுடையவர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கல்வித்துறையை மேம்படுத்தும் எண்ணக்கருவின் கீழ் கிழக்கு மாகாணத்திலுள்ள ஆறு வலயங்களுக்கு நிறைவேற்று முகாமையாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment