தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து - ஒருவர் பலி, சாரதி கைது - News View

Breaking

Post Top Ad

Friday, February 28, 2020

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து - ஒருவர் பலி, சாரதி கைது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடங்கொடை களனிகமவுக்கு இடையில் இன்று (28) காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

கொழும்பு நோக்கிப் பயணித்த லொறியொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து பாதையின் நடுவிலிருந்த பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தின்போது லொறியின் முன்னால் இருந்து பயணித்த ஒருவர் படுகாயமடைந்ததை தொடர்ந்து களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.

48 வயதுடைய காலி, மான்பிட்டிய, மிஹிந்து மாவத்தையைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்விபத்து தொடர்பாக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad