சலுகைகளை வழங்கும் நோக்குடன் சகல ஊடகவியலாளர்களிதும் தகவல்கள் திரட்டல் - News View

Breaking

Post Top Ad

Monday, February 24, 2020

சலுகைகளை வழங்கும் நோக்குடன் சகல ஊடகவியலாளர்களிதும் தகவல்கள் திரட்டல்

நாடாளவிய ரீதியிலுள்ள ஊடகவியலாளர்களுக்கு சலுகைகளை வழங்கும் நோக்குடன் சகல ஊடகவியலாளர்களிதும் தகவல்களை தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

2019ஆம் 2020ஆம் ஆண்டுகளில் அரசாங்க தகவல் திணைக்களம் வழங்கிய அடையாள அட்டையை வைத்திருப்போர் இதற்காக விண்ணப்பிக்க முடியும். 

தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் www.media.gov.lk என்ற இணையத்தளத்தில் இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும். 

அத்தோடு இதற்கான விண்ணப்பப்படிவத்தையும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை இலக்கம் 163, கிருலப்பனை மாவத்தை, பொல்கையன்கொட கொழும்பு ஐந்தில் அமைந்துள்ள ஊடக அமைச்சுக்கு அனுப்பி வைக்க முடியும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad