கருணைக் கொலை சட்டமூலத்திற்கு பாராளுமன்றம் அனுமதி - எதிராக நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் - News View

Breaking

Post Top Ad

Friday, February 21, 2020

கருணைக் கொலை சட்டமூலத்திற்கு பாராளுமன்றம் அனுமதி - எதிராக நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம்

கருணைக் கொலை தொடர்பான சட்டமூலத்திற்கு போர்த்துக்கல் பாராளுமன்றம் அனுமதியளித்துள்ளது.

போர்த்துக்கலில் ஆளும் சோசலிசக் கட்சி உட்பட 5 அரசியல் கட்சிகளினால் முன்மொழியப்பட்ட கருணைக் கொலை சட்டமூலம் நேற்று (20) அந்நாட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

230 பாராளுமன்ற உறுப்பினர்களில் 127 உறுப்பினர்கள் குறித்த சட்டமுலத்திற்கு ஆதரவாகவும் 124 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்த நிலையில், சட்டமூலம் 3 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரும்பாலானவர்கள் இதற்கு அதரவு தெரிவித்த போதிலும் சமயம் சார்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

2 வருடங்களுக்கு முன்னதாக நிராகரிக்கப்பட்ட குறித்த சட்டமூலம் நிலுவையிலிருந்த நிலையில் தற்போது அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்றத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருணைக் கொலைக்கு சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, லக்ஸம்பேர்க் மற்றும் பெல்ஜியத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad