கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 297.7 கிலோ பீடி இலை மீட்பு - News View

About Us

About Us

Breaking

Monday, December 2, 2019

கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 297.7 கிலோ பீடி இலை மீட்பு

கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 297.7 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை கண்டுபிடித்துள்ளது

மன்னார், இலுப்பைக்கடவை, சிப்பியாறு கடற்கரையின் துணுக்காய் பகுதியில் இலங்கை கடற்படையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 297.7 கிலோகிராம் புகையிலைகளை மீட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இன்று (02) காலை கடற்படையினர், நாடு முழுவதிலுமுள்ள கடற்கரையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​இலுப்பைக்கடவை, சிப்பியாறு கடற்கரை பகுதிக்கு அண்மையில் உள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான எட்டு பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த பொதிகளை பரிசோதித்ததில் பீடி இலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட பீடி இலைகளை மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம், சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார்.

மேலும் அண்மைக் காலமாக கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகளில், பீடி இலை கடத்தல்காரர்களின் கடத்தலை தடுக்க கடற்படையினால் முடிந்துள்ளதோடு, இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க கடற்படை தொடர்ந்தும் அவதானமாக இருப்பதாக இசுறு சூரிய பண்டார தெரிவித்தார்.

No comments:

Post a Comment