இருவர் வைத்தியசாலையில் அனுமதி : சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, August 14, 2025

இருவர் வைத்தியசாலையில் அனுமதி : சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

நுவரெலியா - ஹட்டன் A-7 பிரதான வீதியில் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாஹத்த பகுதியில் இன்று (14) காலை 6.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற கெப் வாகனம் நானுஓயா பங்களாஹத்த பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையால் வீதியோரத்தில் இருந்த மின்கம்பத்துடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமுற்ற சாரதியும், மற்றொருவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தின் காரணமாக லொறிக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது நுவரெலியா மாவட்டத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலையின் காரணமாக நுவரெலியா பகுதியில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் கவனமாக பயணிக்குமாறும் பொலிஸார் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment