எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட சென்றுள்ளனர்.
இன்று (23) காலை 9.30 மணியளவில், சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோரும் மெகசின் சிறைச்சாலைக்கு வந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது நிலைமையை அறிந்து கொள்ள அங்கு விஜயம் செய்திருந்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது.
அதன்படி, விளக்கமறியலில் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உயர் குருதி அழுத்தம் மற்றும் நீரிழிவு பிரச்சினைகள் காரணமாக அவரை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்க, வைத்தியர்கள் பரிந்துரை செய்துள்ளதா தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment