கடமைகளை பொறுப்பேற்றார் புதிய பொலிஸ்மா அதிபர் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 14, 2025

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய பொலிஸ்மா அதிபர்

இலங்கையின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட பிரியந்த வீரசூரிய, இன்று (14) பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே தனது நோக்கம் என்று பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற பிறகு அவர் தெரிவித்தார்.

தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர், குறித்த பதவிக்கு பிரியந்த வீரசூரியவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பரிந்துரை செய்ததோடு நேற்று முன்தினம் (12) அரசியலமைப்பு சபை அதனை அங்கீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment