புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய : ஒப்புதல் வழங்கியுள்ள அரசியலமைப்பு சபை - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 12, 2025

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய : ஒப்புதல் வழங்கியுள்ள அரசியலமைப்பு சபை

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசியலமைப்பு சபை இன்று (12) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியபோதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டது.

புதிய பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அவரது பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த வாரம் கூடிய அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment