மலசலகூட குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 8 வயது சிறுவன் - News View

About Us

About Us

Breaking

Monday, August 4, 2025

மலசலகூட குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 8 வயது சிறுவன்

பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் மலசலகூட குழியில் இருந்து 8 வயது சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (03) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, சிறுவனின் தந்தை வீடமைப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தவேளை சிறுவன் தனது கைகளை கழுவுவவதற்கு சென்றவேளை வீட்டின் பின்புறத்தில் நீர் நிரம்பி காணப்பட்ட குழியில் தவறிவிழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது மகனை காணவில்லையென சிறுவனின் தந்தை 2 முறைக்கு மேல் கூக்குரல் எழுப்பியும் மகன் வாரததை அடுத்து தந்தை வீட்டின் பின்புறமாக சென்று பார்த்தபோது சிறுவனின் பாதணிகள் இரண்டும் மிதந்து கொண்டு இருந்ததாகவும், அதன் பிறகு சிறுவனை மீட்டெடுத்து டிக்கோயா கிளிங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது சிறுவன் உயிரழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த சிறுவன் கிவ் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 3 இல் கல்வி கற்று வந்த லியோ பெற்ரீக் எலன்சசன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள தடைவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு உடல்கூட்டு பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிளிங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இந்த தொடர்பாக மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment