மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வகையில் அடுத்த மாதம் முதல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ளும் பயனாளிகளில் பொருத்தமான நபர்களை அடையாளம் காணுவதற்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தற்போது அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் அந்த சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்காராச்சி தெரிவித்துள்ளார்.
விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையும் கடற்றொழில் திணைக்களமும் இணைந்து இந்த திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவுள்ளதுடன் ஏற்கனவே நடைமுறையில் இருந்த மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை செயலிழக்கச் செய்யப்பட்டபோது, சுமார் 60,000 மீனவர்கள் இதன் மூலம் பயன்களைப் பெற்று வந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதன்படி, மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும்போது அந்த எண்ணிக்கையை விட அதிகமான மீனவர்கள் பயன்பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment