600 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெடித்துச் சிதறிய எரிமலை : பாரிய வெடிப்பால் நீடிக்கும் அச்சம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 3, 2025

600 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெடித்துச் சிதறிய எரிமலை : பாரிய வெடிப்பால் நீடிக்கும் அச்சம்

ரஷ்ய கம்சற்கா (Kamchatka) எரிமலையில் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்தெரிவித்துள்ளன.

கம்சற்காவில் கிராஷெனின்னிகோவ் என்ற எரிமலையானது 600 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் வெடித்துச் சிதற ஆரம்பித்துள்ளதாகவும் ஒரே இரவில், கிட்டத்தட்ட 6 கிலோ மீற்றர் உயரத்துக்கு சாம்பல் புகை சூழ்ந்தது. எரிமலை வெடித்துச் சிதறியதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு இதே கம்சற்காவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களின் நீட்சியே இது, மேலும் பல எரிமலைகள் வெடித்துச் சிதற வாய்ப்பு உள்ளது என்று காலநிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment