எக்ஸ்பிரஸ் பேர்ள் (MV X-Press Pearl) கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கைக்கு ஏற்பட்ட சூழல் மற்றும் பொருளாதார சேதம் தொடர்பில் குறித்த கப்பல் நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றையதினம் (24) இது தொடர்பான தீர்ப்பை அறிவித்த உயர் நீதிமன்றம், குறித்த நஷ்டஈட்டுத் தொகையை திறைசேரி செயலாளரிடம் செலுத்துமாறு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், விடயத்திற்கு பொறுப்பாக இருந்த அப்போதைய அமைச்சர் நாலக கொடஹேவா, இந்த அனர்த்தத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் (MV X-Press Pearl) கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து அனர்த்த சம்பவத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பில், கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட சில தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களின் அடிப்படையிலான வழக்கிலேயே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் முர்து பெனாண்டோ தலைமையிலான ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் குறித்த மனு மீதான தீர்ப்பை அறிவித்திருந்தது.
No comments:
Post a Comment