விளக்கமறியலில் இருந்த பறவைகள் பூங்காவின் உரிமையாளருக்கு பிணை - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 30, 2025

விளக்கமறியலில் இருந்த பறவைகள் பூங்காவின் உரிமையாளருக்கு பிணை

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் பூங்காவின் உரிமையாளர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (30) அவரை முன்னிலைப்படுத்திய போது ரூ.2 இலட்சம் பெறுமதியான 2 சரீர பிணைகளில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் பூங்காவில் இருந்து அண்மையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.

இந்த மோட்டார் சைக்கிள்கள் ஒவ்வொன்றின் மதிப்பும் சுமார் ரூ. 1 ½ மில்லியனுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment