நாட்டில் பாடசாலை மாணவிகள் மத்தியில் கருத்தரித்தல் அதிகரித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேலும் தெரிவிக்கையில், அண்மைக் காலமாக நாட்டில் பாடசாலை மாணவிகள் மத்தியில் கருத்தரித்தல் அதிகரித்துள்ளது.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாலியல் ரீதியான உறவு குறித்து தெளிவுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவிகள் கருத்தரிப்பதால் அவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.
கருத்தரித்த பின்னர் கருக்கலைப்பு செய்வதும் உயிரை கொல்லும் ஒரு செயலாகும்.
சிலர் குழந்தைகளை பெற்றெடுத்து பின்னர் அதனை விட்டுச் செல்கின்றனர். இது மிகவும் பாவமான செயலாகும்.
எனவே, பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாலியல் ரீதியான உறவு குறித்தும் குழந்தைகளை பெற்றெடுத்த பின்னர் உள்ள கடமைகள் குறித்தும் தெளிவுப்படுத்துவது மிகவும் அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment