அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்திற்கான மேன்முறையீடு காலம் நாளை (21) நிறைவடையவுள்ளது.
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு சுமார் 30,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதுடன் இது தொடர்புடைய மேன்முறையீடு மற்றும் பொதுமக்களின் ஆட்சேபனைகளை பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப் பெறும் மேல்முறையீடுகள் நலன்புரி நன்மை சபைக்கு அனுப்பப்படுவதோடு மேன்முறையீடு மதிப்பாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் சேகரிக்கப்படும் பயனாளிகளின் தகவல்கள் 22 அளவுகோல்கள் மற்றும் 06 குறிகாட்டிகளின் அடிப்படையில் தானியங்கி அமைப்பைப் பயன்படுத்தி மதிப்பெண் வழங்கப்படுகின்றன.
கணினிமயமாக்கப்பட்ட இச்செயன்முறை IWMS எனப்படுகிறது. இது தொடர்பான புகார்கள் பின்னர் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் நியமிக்கப்பட்ட மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் விசாரணைக்குழுவால் விசாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment